உடுமலை சங்கர் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் அப்பீல்
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை: ஜாதி ஆணவத்தால் உடுமலைப்பேட்டை சங்கரை படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 2015-ம் ஆண்டு தம்முடன் படித்த சங்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை கவுசல்யாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

இதையடுத்து 2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் கவுசல்யா உயிர் பிழைத்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு அண்மையில் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சின்னச்சாமி உட்பட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கில் தீர்ப்பளித்திருந்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications