பாஜக கூட்டணிக்குத் தாவிய சரத்குமாரை "ஹைஜாக்" செய்து தூக்கியது அதிமுக..!
சென்னை: பாஜக கூட்டணிக்கு சென்ற வேகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணிக்கே திரும்பி வந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு சென்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டன் சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது என்றார்.
பாஜக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து தோற்றுவிட்டது. இந்நிலையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து 2 எம்.எல்.ஏ.க்களுடன் வலம் வந்த சரத்குமார் ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தார். பின்னர் ஜெயலலிதா சரத்குமாரை ஒதுக்க ஆரம்பித்தார். நடிகர் சங்க தேர்தலின்போது ஜெயலலிதா சரத்குமாரை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. இதனால் சரத்குமார் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் சரத்குமார் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.வான எர்ணாவூர் நாராயணன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். மேலும் கட்சி நிர்வாகிகள் பலரும் விலகினர். அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்றும், தன்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறி சரத்குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications