முதல்வர் ஓ.பி.எஸ்க்கு அதிமுக கூட்டணி கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு அமோக ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவில் சசிகலாவை தீவிரமாக ஆதரித்த பொன்னையன் போன்ற பலருமே முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்டாயப்படுத்தப்பட்டதாக செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications