Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக்கை துருத்தி… தூக்கி போட்டு அடிக்கிறது அரசியலா? விஜயகாந்தை தாக்கிய சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கோபம் வந்துச்சுன்னா நாக்கைத் துருத்தி, பக்கத்தில இருக்கிறவனைத் தூக்கிப்போட்டு அடிப்பது அரசியல் இல்லை" என அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தாக்கிப் பேசினார்

தென்சென்னைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நீலாங்கரையில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், கூறியதாவது:

Sarathkumar Kick starts LS campain in Chennai

''நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டிநடந்து கொண்டிருக்கிறது. எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி, தமிழகத்தை ஒரு முதன்மை பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்கிற எண்ணத்திலே செயல்படுகிறவர் நம்து முதலமைச்சர் என்பதை மறந்துவிடக்கூடாது.

சகோதரர் ஸ்டாலின்

அன்புச் சகோதரர் ஸ்டாலின், தனது பிரசாரத்தின்போது, ஒரு பட்டியல் போட்டுப் பேசுகிறார். தமிழகத்தில் அரிசி விலை, பருப்பு விலை, கொத்தமல்லி விலை ஏறிப்போச்சின்னு சொல்கிறார். ஆனால், பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலையைப் பற்றிச் சொல்கிறாரா? பெட்ரோல் டீசல் விலை ஏறும்போது தானாகவே விலைவாசி ஏறும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஊழல் திமுக

மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து தி.மு.க. சாதித்தது ஒன்றுதான். உலக அளவிலே யாரும் செய்யமுடியாத அளவிலே காற்றலைகளில் கூட ஒருலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ஊழல் செய்தது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தம் குடும்பம் சிறப்பாக இருக்கவேண்டும், தான் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

மக்களோடு கூட்டணி

கனிமொழிக்கு ராஜ்யசபா சீட் வேணும்னா காங்கிரஸோட சேர்ந்திடுவாங்க. இப்போது காங்கிரஸ் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அன்புச்சகோதரர் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். அங்கு யார் பதவிக்கு வருவது என்பதில் குழப்பம். அவர்களின் எண்ணமெல்லாம் பதவி ரீதியாகவே இருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் எப்படி இருக்க வேண்டும், இந்திய மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகிற முதல்வர் வைத்திருப்பது மக்களோடு கூட்டணி.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்

இன்னொரு அணி இருக்கிறது. அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. முக்கியமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சொல்லவேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டார். அ.தி.மு.க.வுடன் இணைந்து இருந்ததால் 29 இடங்களைப் பெற்றார். எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெற்றார்.

நாக்கை துருத்தலாமா?

என்னைக்காவது சட்டமன்றத்துல பேசியிருக்கீங்களா? எதுக்காகவாது பேசியிருக்கீங்களா சட்டமன்றத்தில்? கோபம் வந்துச்சுன்னா நாக்கைத் துருத்துவீங்க, பக்கத்தில இருக்கிறவனைத் தூக்கிப்போட்டு அடிப்பீங்க. அது அரசியல் இல்லை.

நாற்பதும் நமதே

தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிவிடவேண்டும் என்றால் மத்தியிலே நமக்கு உதவி பண்ணனும். மத்தியிலே அங்கம் வகிக்கின்ற ஆட்சியில் நாம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாற்பதும் நமது நாளையும் நமதே என்ற உறுதியை நாம் எடுக்க வேண்டும் அதற்கு அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் சரத்குமார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+