திருச்செந்தூரில் சரத்குமார் தோல்வி; காட்டுமன்னார் கோயிலில் திருமாவுக்கு 2வது இடம் - தந்தி டிவி
சென்னை: திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சரத்குமார் தோல்வியடைவார் என்றும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் 2 வது இடத்தை பிடிப்பதற்கு இழுபறி நிலை இருப்பதாகவும் தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ கட்சித்தலைவர் சரத்குமார் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தொகுதி மாறி திருச்செந்தூரில் போட்டியிடுகிறார். திருச்செந்தூர் தொகுதியை தனது கோட்டையாகவே மாற்றி வைத்திருக்கும் பலம் பொருந்திய அனிதா ராதாகிருஷ்ணனை சரத்குமார் எதிர் கொள்கிறார்.
அந்த தொகுதியில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் படி திமுக வெல்லும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு 40 - 46 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சிக்கு 36 - 42 சதவீத ஆதரவு காணப்படுகிறது.
அதேபோல் காட்டுமன்னார் கோவில் தனி தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு 24 - 30 சதவீத ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிமுகவுக்கும் 24 - 30 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் இரண்டாவது இடத்துக்கு இழுபறி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பாமக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் விசிகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் திருமாவளவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினத்திற்கு 26 - 32 ஆதரவு காணப்படுகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
திருச்செந்தூர் தொகுதி:
திமுக 40 - 46 %
சமக 36 - 42 %
தேமுதிக 7- 13 %
பாஜக 4 %
நோட்டா 1 %
பிற கட்சிகள் 2 %
தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்:திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? pic.twitter.com/IAG3tNMNsk
— thanthitv (@thanthitv) May 13, 2016
காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதி:
அதிமுக 24 - 30%
விசிக 24 - 30 %
காங்கிரஸ் 26 - 32%
பாமக 11 - 17 %
பிற கட்சிகள் 2%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : #Kattumannarkoil-ல் திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? pic.twitter.com/t1GeRhRpEG
— thanthitv (@thanthitv) May 13, 2016
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications