சரவணன் மீனாட்சி செந்தில் கைது!... எதையோ சுட்டுட்டாராமே? பின்னணி தகவல்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் நாயகன் செந்தில் அவர் வேலை செய்யும் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் இருந்து போலீசாரால் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதைப்பற்றிய செய்திகளும், வதந்திகளும் உலாவ ஆரம்பித்து விட்டது. மனைவியை அடித்து விட்டார் என்றும் வரதட்சணை புகாரில் கைது செய்யப்பட்டார் செந்தில் என்றும் செய்திகள் உலா வர ஆரம்பித்து விட்டது.
அதெப்படி? போன வாரம்தானே விஜய் டெலிவிஷன் விருது விழாவில் இரண்டு பேரும் சேர்ந்து நடனமாடினாங்களே... ஒருவேளை திருஷ்டி பட்டிருக்குமோ என்றெல்லாம் யோசித்த நலம் விரும்பிகள் செந்திலின் மனைவியிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். அப்புறம்தான் தெரிந்தது எல்லாம் சுட்டகதைக்காக போட்ட டிராமா என்று.

நீங்க நான் ராஜா சார்
மிர்ச்சியில் புதிதாக ஆரம்பிக்கப்போற ஒரு நிகழ்ச்சிக்காகத்தான் இந்த கைது நாடகம் என்று சொல்லும் செந்தில், ஏற்கனவே நீங்க... நான்... ராஜா சார் என்ற நிகழ்ச்சியை ரேடியோ மிர்ச்சியில் நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சரவணன் மீனாட்சி
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி, சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். தன்னுடயை ரீல் ஜோடி ஸ்ரீஜாவை திருமணம் செய்து ரியல் ஜோடியாக்கிக் கொண்டார் செந்தில்.

சுட்ட கதை
சீரியல், சினிமாவில் நடித்தாலும் மிர்ச்சி வேலையையும் தொடர்ந்த செந்தில் சுட்டு சுட்டுக் கதைகள் சொல்வார். அந்த நிகழ்ச்சியின் பேரையே ‘சுட்டகதைகள்' என்று பேர் மாற்றி அதை பிரபலப்படுத்தவே இந்த கைது நாடகத்தை அரங்கேற்றினாராம். கதைய சுட்ட செந்தில் கைது என்று நண்பர்களும் இதை இணையத்தில் உலாவவிட்டு பிரபலபடுத்திவிட்டனர்.

உலா வந்த செய்திகள்
செந்திலை கைது செய்யும் காட்சியை மொபைல் போனில் படம் பிடித்து அதை யு டுயூப்பில் அப்லோடு செய்துள்ளனர். இதைப்பார்த்து என்ன ஏது என்று விசாரிக்காமல், வரதட்சணைக் கொடுமை மிர்ச்சி செந்தில் கைது என்று செய்திகள் உலா வரவே ஆளாளுக்கு போன் பண்ணி செந்திலை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
நீங்க நல்லா வருவீங்க
செந்திலை கைது செய்ய போலீஸ் எல்லாம் ஒரிஜினல் போலீஸ் இல்லையாம். அனைவரும் ரேடியோ மிர்ச்சியில் வேலை செய்பவர்கள்தானாம். அது சரி, சினிமாவிற்கு பர்ஸ்ட் லுக்... டீசர், டிரெயிலர் போட்டார்கள்... டிவி சீரியல், நிகழ்ச்சிகளுக்கு ப்ரோமோ போடுகிறார்கள்... இப்போ எப் எம் ரேடியோ நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?... நீங்க எல்லாம் நல்லா வருவீங்க!....
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications