பேய்க்கும் சாமிக்கும் சண்டை... # சரவணன் மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் பேய் கதை எபிசோட் ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது.
Recommended Video

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகுவிற்கு பிடித்திருந்த பேயை விரட்டி விட்டார் அம்மன் மீனாட்சி.
ஒரு காதல் கதையை பேய் கதையாக்கி இப்போது பேய்க்கு மங்களம் பாடி விட்டார்கள். மீண்டும் பேய் வருமா இல்லையா என்பது இயக்குநர் கையில்தான் உள்ளது.
சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் காதல் கதையாக ஆரம்பித்து இந்தி டப்பிங் சீரியல் பாணியில் போய் இப்போது பேய் கதையாக முடிந்திருக்கிறது.

பேய் வீடு
மெஸ் வைப்பதற்காக மீனாட்சி குடும்பத்தினர் ஒரு வீட்டினை வாடகைக்கு பிடிக்க, அந்த வீட்டில் தூக்கு போட்டு இறந்து போன பெண்ணின் பேய் முத்தழகுவை பிடித்துக்கொள்கிறது. இது சரவணன் குடும்பத்தினரை ஆட்டி வைக்கிறது.

அம்மன் மீனாட்சி
பேய் இருந்தால் சாமி வராமலா? சரவணன் மனைவி மீனாட்சிக்கு அம்மன் அருள் பிடிக்கிறது. அப்புறம் என்ன தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறாள் மீனாட்சி.

பேய் ஓடிப்போயிருச்சே
சித்தரை வரவழைத்து சந்திரமுகி ஜோதிகா போல பேயை உட்கார வைத்து ஓட்டுகின்றனர். ஆனால் தன் சாவுக்கு காரணமானவர்களை கொலை செய்யாமல் முத்தழகை விட்டு போகமாட்டேன் என்று கூறி அடம்பிடிக்கிறது பேய். ஆனால் அம்மன் மீனாட்சி பேயின் தலையில் அடித்து ஓட்டுகிறாள்.
|
அப்பாடா பேய் முடிஞ்சிருச்சு
எப்படியோ சரவணன் மீனாட்சி-ல பேய் கான்செப்ட் முடிச்சுட்டுடாங்க என்று பதிவிட்டுள்ளார். பேய் எபிசோடு முடிந்தாலும் முத்தழகுவிற்கு மீனாட்சி மீதான கோபம் மட்டும் குறையவே இல்லை.

சரவணன் குடும்பம் தப்புமா?
மீனாட்சியின் தாய்மாமன் சரவணன் குடும்பத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். பேயிடம் இருந்து தப்பியவர்கள் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்புவார்களா பார்க்கலாம். சரவணன் மீனாட்சி சிந்துபாத் கதையாக நீள்கிறது... சீக்கிரம் முடிங்கப்பா என்று கதறுகின்றனர் நேயர்கள்.












Click it and Unblock the Notifications