'சூரிய சக்தி' மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
கோயம்புத்தூர்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் கேரளாவின் சரிதா நாயர் ஆஜரானார்.
கோவையில் சூரிய மின் சக்தி உபகரணங்கள் தயாரித்து தருவதாக 31 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கேரளாவில், சரிதா நாயர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதால் அம் மாநிலத்தை விட்டு வெளியேற, கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால் கோவை நீதிமன்றத்தில் சரிதா ஆஜராகவில்லை.

அப்படி மாநிலத்தை விட்டு செல்வதாக இருந்தால் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது சரிதா நாயர் கண்டிப்பாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நடந்த விசாரணையில், சரிதா நாயர், ரவி ஆகியோர் எர்ணாகுளம் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கோவையில் ஆஜர் ஆகினர்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வி. கார்த்திகேயன், செப்டம்பர் 18ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications