அரசை சீண்டிய பேச்சு.. பதிலடி கொடுத்த அமைச்சர்.. அதிமுக - விஜய்க்கு இடையே உருவான மோதல்!
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது, அதிமுக தரப்பிற்கு கோவத்தை ஏற்படுத்தி உள்ளதாக பேசப்படுகிறது.
Recommended Video

சென்னை: சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது, அதிமுக தரப்பிற்கு கோவத்தை ஏற்படுத்தி உள்ளதாக பேசப்படுகிறது.
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் பேசி இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலுக்கு வரப்போவதாக எங்கும் கூறவில்லை. ஆனாலும் அவர் பேச்சு முழுக்க அரசியல் மட்டுமே இருந்தது.
முக்கியமாக தற்போதைய மாநில அரசுக்கு எதிராக பேசினார். இதனால் அதிமுக தரப்பில் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.
[ விஜய் அரசியல் பேச்சு முன்கூட்டியே திட்டமிட்டதா? 'சர்கார்' மேடையை பயன்படுத்தியது ஏன் தெரியுமா? ]

அதிமுகவுடன் பிரச்சனை
ஏற்கனவே விஜய்க்கும், அதிமுகவிற்கும் சிறிய மோதல் இருப்பதாக அரசியல் தரப்பிலும், சினிமா தரப்பிலும் ஒரு பேச்சு இருக்கிறது. விஜய் நடித்த தலைவா படத்தின் போது, ஆட்சியில் இருந்த அதிமுக, அந்த படத்திற்கு பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் கத்தி படத்திற்கு வந்த பிரச்சனையும் அதிமுக தூண்டுதலின் பேரில் நடந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

விமர்சிக்கும்படி பேசினார்
இந்த நிலையில்தான் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் நேற்று விஜய் பேசி இருக்கிறார். நேரடியாக விஜய் அதிமுகவை தாக்கி பேசவில்லை என்றாலும், மன்னன் என்றும், கொள்ளையடிக்கிறார்கள் என்றும் கூறிய மறைமுகமாக தாக்கியுள்ளார். அதேபோல் முதல்வராக நடிக்க மாட்டேன், உண்மையான முதல்வராக இருப்பேன் என்றும் கூறி அதிமுகவினரை கிண்டல் செய்யும் விதத்தில் பேசியுள்ளார்.

அமைச்சர் பதிலடி
இந்த நிலையில் இவரது இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் நாட்டை கவனமாக பார்த்துக் கொள்ளும்போது நடிகர்கள் எதற்கு முதல்வராக நினைக்கிறீர்கள்?. சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது, என்று கொஞ்சம் காட்டமாகவே பதில் அளித்துள்ளார்.

மோதல் உருவாகிறதா
திமுகவிற்கு நெருக்கமான கலாநிதி மாறன் தயாரிக்கும் படம் என்பதால், முழுக்க முழுக்க விஜய், அதிமுகவிற்கு எதிராக களமிறங்கி இருக்கிறாராம் என்ற விவாதம் எழுந்துள்ளது. அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அதிமுக, விஜய் மோதல் முற்றி இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள். சர்க்கார் படம் வந்த பின் இது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications