விஜய் அரசியல் பேச்சு முன்கூட்டியே திட்டமிட்டதா? 'சர்கார்' மேடையை பயன்படுத்தியது ஏன் தெரியுமா?
Recommended Video

சென்னை: அரசியலில் ஈடுபட தனக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்த சர்கார் இசை வெளியீட்டு விழாவை விஜய் திட்டமிட்டே பயன்படுத்தியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விஜய் நடித்த முதல் திரைப்படமான 'நாளைய தீர்ப்பு' அரசியல் பேசியது. அப்போது முதலே, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விருப்பம்.
தனது விருப்பத்தை சந்திரசேகர் வெளிப்படையாகவே சமீபகாலங்களில் தெரிவித்திருந்தார். விஜய் சமீபகாலமாக எம்ஜிஆர் வழியை பின்பற்றி படங்களிலும், பாடல்களிலும் சமூக கருத்துக்களை தெரிவித்து வருவதும் இதன் வெளிப்பாடுதான்.

முதல்வரானால்
இந்த நிலையில், முதல் முறையாக தான் முதல்வராக வேண்டும் என்ற ஆசையை, சர்கார் இசை வெளியீட்டு விழாவில், விஜய் வெளிப்படுத்தியுள்ளார். நான் முதல்வரானால், முதல்வர் போல நடிக்க மாட்டேன். பதவிக்கேற்ப நடந்து கொள்வேன். ஊழலை ஒழிப்பேன் என்றெல்லாம் சரமாரியாக பேசி தள்ளிவிட்டார் விஜய். இதுவரை அரசியல் குறித்த கேள்விகளுக்கான பதில்களில் தயக்கத்தை வெளிப்படுத்தி வந்த விஜய், முதல் முறையாக, வெளிப்படையாக பேசியுள்ளார்.
[இதுதான் நம்ம ஏரியா.. ஒரு குட்டி கதை சொன்ன விஜய்.. எத்தனை அரசியல் இருக்கு பாருங்க!]

சர்கார் ஏன்
ஆனால், விஜய் எதேர்ச்சையாக பேசவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருப்பதாகவும், சர்கார் போன்ற, அரசியல் பேசும் படம் ஒன்று, வெளியாக உள்ள நிலையில், அரசியல் ஆசையை வெளிப்படுத்தினால், படம் பார்ப்போர்கள், விஜயின் உண்மையான கதாப்பாத்திரத்தை, படத்தின் கதாப்பாத்திரத்தோடு, பொருத்தி பார்த்து மனதில் உள்வாங்குவார்கள் என்பதால், இப்போது அரசியல் வருகையை பேசுவதே சரியாக இருக்கும் என்று விஜய் நினைத்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

சர்கார் மேடை ஏன்
மேலும், சன் நெட்வொர்க் எடுக்கும் ஒரு திரைப்படத்திற்கான, மேடையில் இதை பேசுவது, ஆளும் கட்சியினருக்கு விஜய் மீது கோபத்தை காட்ட தயக்கத்தை உருவாக்கும் என்பது விஜய் எண்ணமாம். அப்படியே ஆளும் தரப்பு கோபப்பட்டு 'தலைவா' படம் வெளியானபோது பிரச்சினை செய்ததை போல செய்தால், அதை சன் நெட்வொர்க் பார்த்துக்கொள்ளும். விஜய்க்கு அங்கு சமரசம் செய்ய வேலை இருக்காது. இதுதான் அரசியல் பேச்சை, சர்கார் மேடையில் விஜய் பேச காரணம் என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா
எந்த மாதிரி கேள்விகள் கேட்க வேண்டும், என்ன பதில் அளிக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள் நிகழ்ச்சியை வடிவமைத்த குழுவை சேர்ந்த சிலர், நம்மிடம். விஜய் வழக்கமாக பேசும் அவரின் இயல்பான உடல்மொழி, உச்சரிப்பு போன்றவற்றுக்கும், நேற்றைய பேச்சு ஸ்டைலுக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. அவர் சொன்ன குட்டி கதை உள்ளிட்டவற்றுக்கும், மேடையில், பிரசன்னா கேட்ட கேள்விகளுக்கும் தொடர்பு இருந்தது. பேச்சின் நடுவே ஒரே சீராக இடைவெளி விட்டு விஜய் பேசினார். இது இயல்புக்கு மாறானதாக இருந்தது. மொத்தத்தில் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பேச்சு, அரங்கேற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களில் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

நியாயம் இருக்குல்ல
தயாரிக்கப்பட்ட பேச்சுதான் என்றபோதிலும், அவரது பேச்சின் பல பகுதிகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை. அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளும், குட்டிக் கதையின் நீதி போதனையும் உண்மைதான். எப்படி சொன்னாலும், விஜயின், அரசியல் வருகைக்கான மணி ஒலிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications