இதுதான் நம்ம ஏரியா.. ஒரு குட்டி கதை சொன்ன விஜய்.. எத்தனை அரசியல் இருக்கு பாருங்க!
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன கதை ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன கதை ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது.
நடிகர் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். கமல் கட்சி பெயரை அறிவித்து கிராம சபை கூட்டம் நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அரசியல் பேசி இருக்கிறார். சூடான அரசியல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், திகட்ட திகட்ட அரசியல் பேசி இருக்கிறார் விஜய்.
[ தலைவன் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.. சரமாரியாக விளாசிய விஜய் ]

அரசியலுக்கு வருகிறாரா
நேற்று பேசிய விஜய், நேரடியாக அரசியலுக்கு வரப்போவதாக எங்கும் கூறவில்லை. ஆனாலும் மிகவும் தெளிவாக பேசினார். தேர்தல்ல எல்லோரும் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தலை நிற்க போறோம் என்று ஆங்காங்கே கொஞ்சம் நேரடியாகவும் அரசியல் பேசி அதிர வைத்தார்.

விஜய் பேசிய குட்டி கதை
இதில் விஜய் பேசிய குட்டி கதைதான் எல்லோரையும் கவர வைத்தது. ஒரு ராஜா காட்டுக்கு சென்று சாப்பாட்டில் உப்பு இல்லை என்று படைவீரனை உப்பு வாங்கி வர சொல்கிறார். அதற்கு ஏன் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு, கொஞ்சம்தானே எடுத்து வந்தால் என்ன என்று அந்த சிப்பாய் சொல்கிறான். அதற்கு அந்த ராஜா, ஒரு நாட்டின் ராஜாவே அப்படி செய்தால், பிறகு எல்லோரும் திருட ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறுவார். ஒரு ராஜான்னா அப்படி இருக்கணும் என்று விஜய் அந்த கதையில் கூறி இருந்தார்.

என்ன சொன்னார்
இந்த கதை மூலம் விஜய் பல விஷயங்களை மறைமுகமாக சாடி இருக்கிறார், விமர்சனம் செய்து இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் (நண்பர், நண்பிகள்) தெரிவிக்கிறார்கள்.
*தற்போதைய ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
*மன்னன் திருட கூடாது, கொள்ளையடிக்க கூடாது என்றுள்ளார்.
*மேல் மட்டத்தில் இருக்க வேண்டியவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்றுள்ளார்.
*மேல் மட்டத்தில் சரியாக இருந்தால்தான் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் சரியாக இருப்பார்கள்.
*ஒரு தலைவர் சரியாக இருந்தால் கட்சியே சரியாக இருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

காந்தியோட முடித்தார்
அதுமட்டுமில்லாமல் மகாத்மா காந்தியை பின்பற்றுவது கடினம். அவரை போல நல்லவரை பின்பற்ற நாமும் நல்லவராக இருக்க வேண்டும். அயோக்கியர்கள் அவரை பின்பற்ற முடியாது. அதுவே கெட்டவர்கள் என்றால் ''கமான் டா கமான் டா இதுதான் நம்ம ஏரியா'' என்று கெட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதனால் நாமும் சரியாக இருக்க வேண்டும், சரியானவர்களை பின்பற்ற வேண்டும் என்றுள்ளார்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications