விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் இன்ஜின் ஆயிலை ஊற்றியிருப்பார்கள்.. சசி தரூர் பரபர கருத்து
விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால் அவரும் சுவாமி அக்னிவேஷ் போல குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் சசி தரூர் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால், சுவாமி அக்னிவேஷ் போல அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார்.
அவர் முகத்திலும் எஞ்ஜின் ஆயில் ஊற்றி தெருவில் கீழே தள்ளி அடித்திருப்பார்கள். ஏனென்றால், சுவாமி விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் மனிதநேயம் தான் முக்கியம் என்று கூறியவர். அதனால், சுவாமி அகினிவேஷ் தாக்கப்பட்டது போல, சுவாமி விவேகானந்தரும் தாக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சசி தரூர், "மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 4 ஆண்டுகளில் 2,920 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. நாடு முழுவதும் பசுவதை தாக்குதல் தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாஜக ஆட்சியில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய சசி தரூர் பாஜக ஆட்சிக் காலத்தில் மத வன்முறைகளும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூர், பாஜகவையும், இந்துத்துவா அமைப்புகளையும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் அண்மையில், வருகிற 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று விமர்சனம் செய்தார். மேலும், இவர்கள் வருகிற வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பை அழித்துவிட்டு புதிய ஒன்றை எழுதுவார்கள் என்று சசி தரூர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே போல, கடந்த மாதம் ஜார்கண்டில் சுவாமி அக்னிவேஷ் இந்துத்துவா அமைப்புகளால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வந்து அவரைக் காப்பாற்றவில்லை. பின்னர், அவரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பொதுமக்களே காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications