குப்பை பொறுக்க வந்தியா? கூவத்தூரில் போலீஸ் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டிய அமைச்சர்கள்!
கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற காவல் உயர் அதிகாரிகளை குப்பை பொறுக்க வந்தியா என அதிமுக அமைச்சர்கள் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்ய சென்ற போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் வாக்குவாதம் நடத்தினர். அப்போது குப்பை பொறுக்க வந்தியா என போலீஸ் உயர் அதிகாரிகளை அமைச்சர்கள் ஒருமையில் தரக்குறைவாக திட்டியுள்ளனர்.
கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த அதிமுக எம்எல்ஏ சரவணன், சசி குரூப் அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி அடைத்து வைத்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக போலீசில் அவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்பட 4 பேர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி, ஐஜி செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த ரிசார்ட்டுக்குள் சென்றனர்.
அப்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போலீசாருடன் வாக்குவாதம் நடத்தினர். அப்போது அமைச்சர்கள் சிலர் எஸ்பி முத்தரசியைப் பார்த்து குப்பை பொறுக்க வந்திருக்கியா என ஒருமையில் தரக்குறைவாக திட்டியுள்ளனர்.
போலீஸ் உயர் அதிகாரிகளை சசி ஆதரவு எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் ஒருமையில் தரக்குறைவாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications