ஆட்சியை விட கட்சிதான் முக்கியம்... தினகரனுக்கு 'ஜெயில் உபதேசம்' செய்த சசிகலா
அதிமுகவை கைப்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என தினகரனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம் சசிகலா.
Recommended Video

சென்னை: தனிக்கட்சி தொடங்குவதற்கு பதில் அதிமுகவை கைப்பற்றுவதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என தினகரனுக்கு சசிகலா உபதேசம் செய்து அனுப்பி வைத்திருக்கிறாராம்.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். ' தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை. அதற்குள் 50 எம்.எல்.ஏக்கள் வரையில் நம்பக்கம் வந்துவிட வேண்டும் எனத் திட்டம் வைத்திருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆட்சியை அகற்ற சதி
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், ஆட்சியை அகற்றுவதற்கான தனது அஸ்திரங்களை விளக்கியிருக்கிறார். இந்த சந்திப்பில், ' நமக்கு எதிராக மூன்று அமைச்சர்கள்தான் தீவிரமாக செயல்படுகிறார்கள். அவர்கள் பக்கம் இருக்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மிடம் வந்துவிடுவார்கள்.

ஆட்சி நீடிக்க கூடாது
அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த அமைச்சர்கள் செயல்படும் விதத்தை பல எம்.எல்.ஏக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை தேர்தல் வந்தாலும் நம்பக்கம் இருப்பதைத்தான் எம்.எல்.ஏக்கள் விரும்புகிறார்கள். ஆட்சிக் கலைப்பை நோக்கி நாம் முடிவெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வலுப்பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.

ஆட்சியைவிட கட்சி முக்கியம்
இதற்குப் பதில் அளிக்காமல் சில நொடிகள் மவுனம் காத்த சசிகலா, ஆட்சியைவிட கட்சியே முக்கியம். எதைச் செய்தாலும் நன்றாக யோசித்து முடிவெடு' எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்துக் களமிறங்கிய தினகரன், தங்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் பட்டியலைக் கையில் எடுத்திருக்கிறார்.

பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள்
இதைப் பற்றி தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசும்போது, ' அடுத்த வாரத்துக்குள் 12 எம்.எல்.ஏக்கள் வந்துவிடுவார்கள். இன்னும் 15 நாட்களில் நாம் விரும்பும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் வருவார்கள் எனக் கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் தினகரன் இலவு காத்த கிளியாகத்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆளும் தரப்பு.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications