திவாகரன் மூலமாக என்னை பற்றி போட்டுக் கொடுப்பதே எடப்பாடிதான்... சசியிடம் பற்ற வைத்த தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திவாகரன் மூலமாக என்னை பற்றிய தகவறான தகவல்களை முதல்வர் எடப்பாடிதான் சொல்ல வைக்கிறார் என சசிகலாவிடன் கெஞ்சாத குறையாக முறையிட்டிருக்கிறார் தினகரன்.

சசிகலாவின் விடுதலையை தினகரன் விரும்பவில்லை; சசிகலா வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் தினகரன் என தகவல் அனுப்பியிருந்தார் திவாகரன் என நாம் சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். சசிகலாவுக்கு இப்படி ஒரு தகவல் போனதைத் தொடர்ந்து பதறிப் போனார் தினகரன்.

சசியுடன் சந்திப்பு

சசியுடன் சந்திப்பு

இதனால் பெங்களூருக்கு போன தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தொடக்கத்தில் சசிகலா சில விவரங்களை கோபத்துடன் தினகரனிடம் கேட்டிருக்கிறார்.

லாபியிஸ்டுகளுடன் பேச்சு

லாபியிஸ்டுகளுடன் பேச்சு

பின்னர் தினகரனே சீராய்வு மனுவைப் பற்றி பேசியிருக்கிறார். இப்போது கூட டெல்லி லாபியிஸ்டுகளிடம்தான் பேசிவிட்டுதான் வந்தேன்.. நமக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என கூறியிருக்கிறார்.

எடப்பாடிதான் காரணம்

எடப்பாடிதான் காரணம்

அத்துடன் என்னைப் பற்றி திவாகரன் உங்களிடம் பொய்யான தகவல்களை சொல்லி வைக்கிறார். இதற்கு காரணமே எடப்பாடிதான்.

திவாகரன்

திவாகரன்

திவாகரனும் எடப்பாடியும் இணைந்து செயல்படுகின்றனர்.,, எடப்பாடி திவாகரனை முழுமையாக வளைத்து வைத்திருக்கிறார் என ஏகத்துக்கும் புகார்களை அடுக்கியிருக்கிறார். பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசியிருக்கின்றனர்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

மீராகுமாரை ஆதரிக்க திருநாவுக்கரசர் மூலமாக காங்கிரஸ் முயற்சிக்கும் தகவலையும் சசிகலாவிடம் கூறியிருக்கிறார் தினகரன். இது பற்றி பிறகு பேசி முடிவெடுக்கலாம் என சசிகலா கூறிவிட்டாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Sasikala was very upset over TTV Dinakaran.
Please Wait while comments are loading...