For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமே "அந்த" மனுசர்தான்... 'கரித்து கொட்டிய' சசிகலா

தமது குடும்பம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்குமே காரணமே கணவர் நடராஜன் என கொந்தளித்திருக்கிறார் சசிகலா.

Google Oneindia Tamil News

சென்னை: தமது குடும்பம் இவ்வளவு துயரங்களை எதிர்கொள்ள காரணமே கணவர் நடராஜனின் பேராசைதான் என தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் சசிகலா.

சசிகலாவை அரசியலுக்கு இழுத்துவிட்டதில் கணவர் நடராஜனுக்குத்தான் அதிகம் பங்கு உண்டு. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோதே நாங்களே அதிமுக என பிரகடனம் செய்தவர் நடராஜன்.

பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவிலும் நாங்கள் குடும்ப அரசியலைத்தான் செய்வோம்.. ஆனதை பார்த்து கொள்ளுங்கள் என எகத்தாளமாக பேசியவர் நடராஜன். அவரது நெருக்கடியில்தான் 'விகே சசிகலா எனும் நான்' நாடகங்கள் அரங்கேறின.

ஓரம் கட்டப்பட்ட சசி கோஷ்டி

ஓரம் கட்டப்பட்ட சசி கோஷ்டி

ஜெயலலிதா மறைந்த உடனேயே சசிகலா கோஷ்டி அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றுவதை டெல்லியால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் விளைவுதான் இப்போது ஒட்டுமொத்தமாக சசிகலா கோஷ்டி ஓரம்கட்டப்பட்டுள்ளது.

நடராஜனே காரணம்...

நடராஜனே காரணம்...

இந்நிலையில் பெங்களூருவில் தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார் சசிகலா. அப்போது, கணவர் நடராஜனின் நடவடிக்கைகளால்தான் நாம் பலவீனமடைந்தோம். ஆர்.கே.நகரில் தினகரன் அவசரப்படாமல் இருந்திருந்தால் கைது வரைக்கும் சென்றிருக்காது.

தினகரனின் தன்னிச்சை முடிவு

தினகரனின் தன்னிச்சை முடிவு

என்னிடம் ஆலோசிக்காமலேயே வேட்பாளராக தம்மை அறிவித்துக் கொண்டார் தினகரன். தன்னிச்சையாக தினகரன் முடிவெடுத்ததால்தான் பல எதிர் விளைவுகளை உருவாக்கிவிட்டது. அடுத்த மூன்று மாதம், நம்மை முழுமையாக முடக்கிப் போட்டுவிடுவார்கள். அதன்பிறகு நாம் எதாவது முயற்சி மேற்கொண்டாக வேண்டும்.

தினகரனுக்குதான் வாய்ப்பு

தினகரனுக்குதான் வாய்ப்பு

நமது குடும்பத்திலேயே தினகரனுக்கு மட்டும்தான் அரசியல் அந்தஸ்தைக் கொடுத்தார் ஜெயலலிதா. அவரைத் தாண்டி வேறு யாரையும் அவர் நமது குடும்பத்தில் இருந்து தேர்வு செய்யவில்லை.

ஜாதி எம்.எல்.ஏக்களும் கூட

ஜாதி எம்.எல்.ஏக்களும் கூட

தற்போது நாம் தினகரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இன்றைக்கு தினகரன் கைதுக்கு எதிராக, நமது ஜாதியில் இருந்து எத்தனை எம்.எல்.ஏக்கள் வந்தார்கள்? நம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட பன்னீர்செல்வமே திரும்பி நிற்கும்போது, எடப்பாடியிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? மன்னார்குடியில் உள்ள நமது உறவுகளும் தினகரனுக்காக துடிக்கவில்லை. இன்றைக்கு நாம் போராடவில்லையென்றாலும், மோடி நம்மை சேர்த்துக் கொள்ளவா போகிறார்? நாம் தொடர்ந்து போராடுவோம் என கரித்து கொட்டியிருக்கிறார் சசிகலா.

English summary
Sources said that Sasika angry over her husband Natarajan for the all problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X