ஆர்கே நகர் தேர்தல் ரத்தால் அதிர்ச்சி.. தினகரனுக்கு சிறையில் இருந்து டோஸ் விட்ட சசிகலா
ஆர்கே நகர் தேர்தல் ரத்தால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். தமது பேச்சை மீறி தினகரன் போட்டியிட்டதால்தான் தேர்தல் ரத்தானது என அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா.
சென்னை: ஆர்கே நகரில் டிடிவி தினகரன் போட்டியிட்டதை சகிக்காமல் இருந்த சசிகலாவுக்கு தேர்தலே ரத்து செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். இதனால் சிறையில் இருந்தபடியே இளவரசி மகன் விவேக் செல்போனில் தினகரனை தொடர்பு கொண்டு கடுமையாக டோஸ் விட்டாராம் சசிகலா.
சசிகலா சிறைக்குப் போகும்போது ஆர்கே நகர் தொகுதியில் குடும்ப உறவினர்கள் யாரும் போட்டியிட வேண்டும்; எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் போட்டியிடட்டும் என கூறியிருந்தார்.
சுதா விஜயகுமார் மட்டுமே அதிமுகவில் ஆர்கே நகரில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரைத்தான் தேர்வு செய்யப்போகிறோம் என அதிமுக ஆட்சி மன்ற குழுவினரும் எதிபார்த்திருந்தனர்.

திடீர் வேட்பாளர் தினகரன்
ஆனால் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் முடிவடையும்போது தம்மை வேட்பாளராக அறிவிக்க தினகரன் உத்தரவிட்டார். இதனால் வேறுவழியே இல்லாமல் தினகரனை அதிமுக ஆட்சி மன்ற குழு வேட்பாளராக அறிவித்தது. இதை கேள்விப்பட்ட சசிகலா கொந்தளித்துப் போனார்.

சசிகலா இருட்டடிப்பு
இதன்பின்னர் சசிகலாவின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தாமலேயே அவரை இருட்டடிப்பு செய்து தேர்தல் பிரசாரத்தில் மும்முரமானார் தினகரன். இதனால் என்னதான் செய்வது என தெரியாமல் தவித்து வந்தார் சசிகலா.

பேச்சை கேட்கலையே...
இதனிடையே ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்தாகலாம் என செய்திகள் வர ரொம்பவே அதிர்ந்து போனாரம் சசிகலா. மத்திய அரசு நம்மை விரும்பவில்லை.. இப்படியெல்லாம் செய்யக் கூடும் என்பதால்தானே உறவினர்களே போட்டியிட வேண்டாம் என சொன்னேன்.. என் பேச்சை கேட்காததால் இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது என குமுறியுள்ளார்.

போனில் டோஸ்
அப்போது சசிகலாவை சந்திக்க இளவரசி மகன் விவேக் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது செல்போன் மூலம் டிடிவி தினகரனை தொடர்பு கொண்டு கடுமையாக சாடிவிட்டாராம் சசிகலா. இதனால் தினகரன் தரப்பு வெளிக்காட்டாமல் படு அப்செட்டில் இருந்து வருகிறதாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications