10 பேர் கொண்ட குழுவுடன் ஆளுநரைச் சந்தித்தார் சசிகலா.. !
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை சந்திக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவுடன் ராஜ்பவன் சென்றார் சசிகலா.
சென்னை: சட்டசபை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா இன்று மாலை ராஜ்பவன் சென்றார். அங்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவைச் சந்தித்தார்.
தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஆளுநரின் வருகை அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார் என்று புகார் கூறியுள்ளார் முதல்வர் ஓபிஎஸ்.

எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன் என்று ஓபிஎஸ் கூறிய உடனேயே பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்தநிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அவரை இன்று இரவு சந்தித்தார் சசிகலா.
10 பேர் மட்டுமே அனுமதி என்று ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டிருந்ததால் சசிகலாவுடன் 10 பேர் கொண்ட குழு மட்டும் ராஜ்பவன் போயுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களுடன் தனக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் அடங்கிய பட்டியலுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். எம்எல்ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications