ஜெயலலிதாவை நினைத்து டி.வி. பேட்டியில் கண்கலங்கிய சசிகலா !
சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சசிகலா மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த சசிகலா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், இத்தனை ஆண்டுகள் நான் தான் ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டேன். ஜெயலலிதா எவ்வளவு வலிகளை தாங்கினார்கள் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் நான் எப்படி கவனித்துக் கொண்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும் போதே கண் கலங்கினார் சசிகலா. ஜெயலலிதா இறந்த போது எத்தனை கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் என்னைதான் தலைமை ஏற்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் நன்றாக பேசிக்கொண்டே பச்சை துரோகம் செய்துவிட்டார் என்ற குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications