அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா, டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி அக்கட்சியின் அவைத்தலைவர் (சமீபத்தில் சசிகலாவால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்) மதுசூதனன் அறிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவான மதுசூதனன் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அனைத்து தொண்டர்களும் வாக்களித்துதான் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதிமுறை என்பதால் இந்த நியமனம் செல்லாது என அறிவிக்க கூறி ஏற்கனவே பன்னீர்செல்வம் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

Sasikala, Dinakaran and Venkatesh sacked from ADMK

மேலும், சசிகலாவால் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் நியமனமும் செல்லாது என மதுசூதனன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விரட்டிவிடப்பட்ட, சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் கட்சியில் மீண்டும் சேர்த்தார் சசிகலா. அந்த நியமனத்தையும் ரத்து செய்வதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.

மதுசூதனனை அவைத்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் கூட சமீபத்தில் சசிகலா நீக்கியிருந்தார். இந்த நிலையில் மதுசூதனன் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+