ரிசார்ட்டில் அடைபட்டுள்ள எம்.எல்.ஏக்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் சசிகலா பேச்சு!
வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை போயஸ் கார்டனில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

அதேபோல் முதல்வர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதனால் சசிகலா கோஷ்டி பீதியடைந்துள்ளது.
இதனிடையே சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதேபோல், தங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும் சுதந்திரமாகவே தாங்கள் உள்ளோம் என எம்.எல்.ஏ-க்கள் சிலர் பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில், சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையின் போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications