புரட்சி தாரகை... கழகத்தின் தலைமகளே... எதிர்காலமே.... சசிகலாவுக்கு குவியும் பட்டங்கள்!
சசிகலாவுக்கு அதிமுகவினர் புதிய பட்டங்களை அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களுக்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவை ஏற்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய புதிய பட்டங்களும் அதிமுகவினர் பேனர்கள் வைத்தும் வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறி வருகின்றனர்.

ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை ஏற்க மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து தினமும் போயஸ் கார்டனுக்கு ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்படுகின்றனர்.
இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி தாரகையே! கழகத்தின் தலைமகளே! கழகத்தின் எதிர்காலமே! கழகத்தின் நிகழ்காலமே! என புதிய புதிய பட்டங்களுடன் பேனர்களையும் அதிமுகவினர் வைத்து வருகின்றனர். இந்த பேனர்களை அதிமுக தொண்டர்கள் சில இடங்களில் கிழித்தும் வருகின்றனர்.
அத்துடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற பேனர்களும் வைக்கப்படுகின்றன. இவற்றை சசிகலா ஆதரவாளர்கள் அகற்றியும் வருகின்றனர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications