பல்லைக் கடித்து, ஓங்கி அடித்து, தூசியை தட்டி... ஜெ. நினைவிடத்தில் தாதாவான சசிகலா
சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா அவரது நினைவிடத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கி அடித்து சபதம் செய்தார்.
சென்னை: சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது நினைவிடத்தில் சபதம் ஏற்பது போல பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கியடித்து சசிகலா மிரட்டினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் குற்றவாளி அறிவித்தது. அவர்கள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உடனே சரணடைய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் நேற்று பொழுது முழுவதையும் கூவத்தூர் ரிசார்ட்டிலேயே கழித்தார் குற்றவாளி சசிகலா. இன்று பெங்களூரு சிறைக்கு சரணடைய புறப்பட்ட சசிகலா சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பல்லைக்கடித்துக்கொண்டு அடித்த சசி
அப்போது ஏதோ முனுமுனுத்த சசிகலா சபதம் ஏற்பதுபோல் மூன்று மூறை ஓங்கி ஓங்கி ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அடித்தார். முதல் முறை சமாதியின் மேல் அடிப்பதற்கு முன்பாக உள்ளங்கையை உற்றுப்பார்த்த சசிகலா பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கி அடித்தார். இதேபோல் அடுத்த 2 முறையும் ஏதோ முனகிய படியே அவர் ஓங்கி ஓங்கி அடித்தார்.

அடித்து மிரட்டிய சசிகலா
ஜெயலலிதாவுக்குப் பின் எப்போதும் அமைதியாக நின்ற சசிகலா இன்று பல்லைக்கடித்துக்கொண்டு அவரது சமாதியில் ஓங்கியடித்தது மிரட்டலாக இருந்தது. உணர்ச்சிப் பெருக்கில் ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அவர் அடித்து சத்தியம் செய்தப் போதும் தனது கையில் இருந்த பூக்களை ஒவ்வொருமுறையும் தட்டிவிடுவதில் மிகவும் கவனமாக இருந்தார்.

அரசியல் அநாகரிகம்
உணர்ச்சி ததும்ப சத்தியம் செய்யும் போது யாரும் இப்படி கையை சுத்தம் செய்துக்கொண்டிருக்க மாட்டார்கள். மறைந்த முதல்வரின் நினைவிடத்தில் அடித்து சபதம் ஏற்பது அநாகரிகம் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சசிகலாவின் நாடகம்
இது சசிகலாவின் நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. . சிறைக்கு செல்லும் முன்பு ஜெ. நினைவிடத்தில் சசிகலா ஓங்கி அடித்திருப்பது சலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாதவர்
சசிகலாவின் இந்த மிரட்டலால் பொது இடத்தில் சசிகலாவுக்கு பேசவும் தெரியவில்லை எப்படி நடந்து கொள்வது என்றும் தெரியவில்லை. அவர் அரசியலுக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாதவர் என்றும் கருத்து எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications