For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடிக்கு ஆதரவு திரட்ட பள்ளி மாணவர்களை களமிறக்கிய சசி குரூப்.. கூவத்தூரில் சர்ச்சை

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு திரட்ட கூவத்தூரில் சசிகலா குரூப் பள்ளி மாணவர்களை களம் இறக்கியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஓட்டம்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை வைத்து ஆதரவு திரட்டும் பணியில் சசிகலா குரூம் இறங்கியுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Sasikala group using School students to get support

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஓட்டம் பிடித்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஏற்கனவே தமிழகம் ழுழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரது ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா தரப்பு ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளை சசிகலா குரூப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது. கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு வெளியே பள்ளி மாணவர்கள் ஆதரவு திரட்டினர்.

அவர்கள் சசிகலா, ஜெயலலிதா படம் போடப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர். பள்ளி மாணவர்களை கட்சி பிரச்சாரத்திற்கு சசிகலா குரூப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Sasikala group using School students to get support for Edappadi palanisamy from public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X