மகாளய அமாவாசை: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஜெ. தோழி சசிகலா சிறப்பு பூஜை
திருவள்ளூர்: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மகாளய அமாவாசை தினமான இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு வாய்ந்த தினமான மகாளய அமாவாசை தினமான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்கு நேற்று இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை மேலும் பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஒருவழி பாதையான கிழக்கு குளக்கரை சாலையில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

சசிகலா சாமி தரிசனம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்று மகாளய அமாவாசைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
நினைத்த காரியம் நடக்கும்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை அன்று பக்தர்கள் கோயில் குளத்தில் நீராடி, மூலவரை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
அமாவாசை தரிசனம்
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமாவாசை தினத்தன்று வந்து அதிகாலை வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தற்போது 3வது முறையாக அமாவாசை தினமான இன்று காலை கோயிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண மரியாதை செலுத்தப்பட்டது.
நேர்த்திக்கடன்
அம்மனை தரிசனம் செய்த பின்னர் மூலவரை தரிசனம் செய்த சசிகலா, கோயில் குளக்கரைக்கு சென்று குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினார். தரிசனம் முடிந்து திரும்பிய சசிகலாவுக்கு பிரசாதம் வழங்கினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications