ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் ஜெயில் உறுதிதான்... தினகரனுடன் மல்லுக்கட்டும் நடராஜன்
Recommended Video

சென்னை: ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சம் ஜெயிலுக்குப் போவது உறுதி; அதனால் போட்டியிட கூடாது என தினகரனை வம்படியாக தடுத்து வருகிறாராம் சசிகலா கணவர் நடராஜன்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இலையை மீட்பதற்காக இலையை எதிர்த்து நிற்கிறோம். கட்டாயம் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டார் தினகரன்.

ரசிக்காத மன்னார்குடி உறவுகள்
அவரது இந்த முடிவை மன்னார்குடி உறவுகள் விரும்பவில்லை. ஆனால் எனக்கு ஏராளமான இளைஞர் படை இருக்கிறது. ஏற்கெனவே வாக்குகளுக்குப் பணம் கொடுத்துள்ளோம். மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் நாம் பெறப் போகும் வாக்குகள் ஆளும்கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தும். நமது பின்னால் அ.தி.மு.க தொண்டர்கள் அணி திரளவும் ஒரு வாய்ப்பாக அமையும் எனப் பேசி வருகிறார் தினகரன்.

ஜெயிலுக்கு போவது உறுதி
அவரது இந்தக் கருத்தை சசிகலாவின் கணவர் நடராஜன் ஏற்கவில்லை. இதுகுறித்து குடும்பத்து உறவுகளிடம் பேசிய நடராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருப்பதே நல்லது. டெல்லியில் இருந்து நமக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். நமது குடும்பத்தைக் குறிவைத்து ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

பென்னாகரம் நினைவு
வருமான வரித்துறையின் மூலம் பொருளாதார குற்ற வழக்குகளைப் போட்டுவிட்டு, அதை கிரிமினல் வழக்குகளாக மாற்றவும் முயற்சி செய்வார்கள். ஆர்.கே.நகரில் நாம் போட்டியிட்டால், இந்த வழக்குகள் நமது கழுத்தை நெரிக்கத் தொடங்கிவிடும். ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த காலகட்டங்களும் உண்டு. பென்னாரகத்தில் ஏற்பட்ட நிலையை அனைவருக்கும் தெரியும். ஆளும்கட்சியாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

உள்ளாட்சி தேர்தலை பார்ப்போம்
பிரதான போட்டி என்று பார்த்தால், தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில்தான். நம்மை நோக்கி வந்த காங்கிரஸ், வி.சி.க கட்சிகளும் தி.மு.க அணிக்குப் போய்விட்டன. நாம் தனியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தால் நாம் போட்டியிடலாம். மாநிலம் முழுவதும் பரவலாக நமக்கு உள்ள பலத்தை முன்வைத்துக் களமிறங்குவோம்.

தினகரன் நிராகரிப்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தால், எந்தவித வருமான வரித்துறை சோதனையும் நடக்காது. அதைத்தான் டெல்லியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். நமக்கான நேரம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என விவரித்திருக்கிறார். இதை தினகரன் கேட்பதாகவும் இல்லையாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications