ஜெயலலிதா யாரையும் அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை.. பொன்னையன் பொளேர் பல்டி
அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அறிவிக்கவில்லை என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையும் அரசியல் வாரிசு என்று அறிவிக்கவில்லை என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி புரிந்திட பன்னீர்செல்வத்திற்கே தகுதி உள்ளது. 95% அதிமுகவினர் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமே உள்ளனர் எனக் கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிமுகவினர் மீது சசிகலா நடவடிக்கை எடுத்தால் செல்லாது. அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்பதே சட்டம் என்றார்.
முன்னதாக, 1991-ம் ஆண்டு ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ7 லட்சம் முதலீடு செய்தார் என்றும், அதில் நிதிசேமிப்பு வாரிசாக சசிகலாவைத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் சசிகலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்துவிட்டார் என்றும் பொன்னையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications