தமிழக மாணவர்கள் மீது "நீட்" தேர்வை திணிக்கக் கூடாது.. மோடிக்கு சசிகலா கடிதம்
சென்னை: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியதால் 'நீட்' தேர்வில் விலக்கு பெற பிரதமருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ மேற்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டாயம் என்று தீர்ப்பளித்துள்ள 'நீட்' தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டசபையில் 2 மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டங்களை கற்றுவருகின்றனர். 'நீட்' தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) அடிப்படையாக கொண்டது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாதகமான ஒன்றாகும்.
முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கையில் தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமையும், மலைப்பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கொடுத்து வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு 2 மசோதாவை நிறைவேற்றிய நிலையில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழகத்துக்கு உங்களுடைய உதவி தேவை. உங்களுடைய உதவிக்கு தமிழக மக்களும், மாணவர்களும், குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களும் மிகவும் நன்றிகரமாக இருப்பார்கள்.
என்னுடைய கட்சியான அ.தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications