ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப் படிப்பு மோசடி-லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப் படிப்பு மோசடி-லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
Recommended Video

சென்னை: ஓராண்டுக்கு முன்னர் நமது ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப்படிப்பு மோசடி விவகாரத்தில் தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
"சட்ட படிப்பில் இளவரசி மகன் விவேக் ஃபிராடு? போட்டுக் கொடுத்ததா திவாகரன் தரப்பு?" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதியன்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் விதிகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமனுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் வீடுகளில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது பதவி காலங்களில் பேராசிரியர் நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியது; வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் விவேக் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2015-ல் 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கான எந்த ஒரு சான்றிதழும் விவேக் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு முறைகேடாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இம்மோசடியில் ஆதாயம் அடைந்தவர் விவேக் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவேக் மீது விரைவில் நடவடிக்கை பாய இருக்கிறது என கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications