ஓபிஎஸ் வீட்டு முன் ஒட்டப்பட்ட சசி போஸ்டர்கள் கிழிப்பு.. தீபா ஆதரவாளர்களா.. சென்னையில் பரபரப்பு
சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒட்டப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீடு சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ளது. அவரது வீட்டிற்கு முன் உள்ள சுவற்றில் சசிகலாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை யாரோ கிழித்து எறிந்து விட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போஸ்டர்களை கிழித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமபுரம் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபாவின் ஆதரவாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா தலைமைக்கு வருவதை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பலர் விரும்பவில்லை. அப்போதில் இருந்தே சசிகலாவின் போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளதால் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சசிகலாவின் போஸ்டர்கள் எங்கு ஒட்டப்பட்டாலும் அதனை தீபாவின் ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications