ரெண்டு பேருமே "பிராடு".. போட்டுத் தாக்கும் சசிகலா புஷ்பா
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஓ.பி.எஸ். அணியாகட்டும், எடப்பாடி அணியாகட்டும், இருவருமே மக்களை ஏமாற்றுகிறார்கள், கோமாளிகளாக்குகின்றனர் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இன்று வந்தார் சசிகலா புஷ்பா. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவின் இரு அணிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது அதிகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் எதுவும் செய்வதில்லை.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்தோ, தினகரன் குறித்தோ பேசவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள். இது தமிகத்துக்கு துரதிருஷ்டவசமானது என்று கூறினார் சசிகலா புஷ்பா.












Click it and Unblock the Notifications