Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னம்மா வாழ்க... கோஷமிட்டபடியே சசிகலா புஷ்பா கணவர் முகத்தில் சரமாரியாக குத்திய கும்பல்!

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் சின்னம்மா வாழ்க என்ற கோஷமிட்டபடியே கொலைவெறியோடு தாக்கினர். இச்சம்பவம் அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜனை தேர்வு செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மீது சின்னம்மா வாழ்க என கோஷமிட்ட ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது அக்கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக தகுதி இல்லை என சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் இருவருமே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

Sasikala Pushpa's husband attack by Sasikala Natarajan supporters

இந்த நிலையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட சசிகலா புஷ்பாவுக்காக மனு வாங்க லிங்கேஸ்வரன் அதிமுக அலுவலகத்துக்கு வந்தார். அவரை மகளிர் அணியைச் சேர்ந்த வேளாங்கண்ணி தலைமையிலான ஒரு குண்டர் கும்பல் கொலைவெறியோடு தாக்கியது.

இதில் லிங்கேஸ்வரனின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Sasikala Pushpa's husband attack by Sasikala Natarajan supporters

சசிகலா நடராஜனுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளபோது வழக்கு தொடர்ந்தவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். அதுவும் சின்னம்மா வாழ்க என சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடியே தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+