போயஸ் கார்டனில் காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தனர்... சசிகலா புஷ்பா குமுறல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் தாம் தாக்கப்பட்டதுடன் போலீசாரிடம் லத்தியை கொடுத்தும் அடிக்க வைத்தனர்.. அப்போது என் காலில் ரத்தம் கொட்டியது என்று வழக்கறிஞர்களிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா குமுறியுள்ளார்.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் சசிகலா புஷ்பா வரும் 29-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமது வழக்கறிஞர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா குமுறலுடன் கூறியதாவது:
முன்ஜாமீன் மனுவில் உள்ள கையெழுத்து தொடர்பான சந்தேகத்தை தெளிவுபடுத்த நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கெல்லாம் நேரில் ஆஜராக தேவையில்லை. உச்சநீதிமன்றத்துக்கு சென்றாவது எப்படியும் முன்ஜாமீன் வாங்கிவிடுவேன்.
முன்ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டுக்குள் ஒருபோதும் கால் வைக்க மாட்டேன். போயஸ் கார்டனில் நடந்ததை அப்படி எல்லாம் சீக்கிரமாக மறந்துவிட முடியாது.
"அவர்கள்" என்னை அடித்ததுடன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள்..... காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள்.
அதனால்தான் ராஜ்யசபாவில் பேசினேன். நான் வாங்கிய அடிகளுக்கு பதில் வேண்டும்.. இப்போது சமரசம் பேசுகிறார்கள்..
எனக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை.. எல்லாம் நான் வணங்கிய கடவுள் கொடுத்தது..
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications