சசிகலா கனவில் குண்டைப் போட்ட ஓ.பி.எஸ்.. இனி ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது!
சசிகலாவின் முதல்வர் கனவில் ஓ.பன்னீர் செல்வம் குண்டைப் போட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.
சென்னை: அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மொத்தமாக சசிகலாவின் முதல்வர் கனவில் அணு குண்டு போட்டு விட்டார். இனி சசிகலாவால் நிச்சயம் முதல்வர் பதவிக்கு வர முடியாத நிலையையும் அவர் ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
தன்னிடம் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலக வைத்து விட்டதாக பகிரங்கமாகவே கூறி விட்டார் ஓ.பன்னீர் செல்வம். இது போதும், அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் நிராகரிக்க. எனவே சட்டப்படி ஓ.பன்னீர் செல்வமே முதல்வராக நீடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

அதிமுக எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சசிகலா ஆட்டம் காட்ட முயலலாம். ஆனால் அதற்கும் அதிமுகவினர் ரூபத்தில் பெரும் மிரட்டில் உள்ளது. நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்திற்குப் பின்னால் கட்சியினர் திரள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. விடிந்தால் மிகப் பெரிய பிரளயத்தை அதிமுக சந்திக்கும், சசிகலா சந்திப்பார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கட்சியினரை மதிக்காமல், அவர்களை தூக்கி எறிந்து விட்டு நிச்சயம் சசிகலா குரூப் எந்த துணிகரமான முடிவையும் எடுக்காது என்றே தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வம் இந்த அளவுக்கு இறங்கிப் பேசி விட்டதால் நிச்சயம் சசிகலாவால் இனி முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.
இதைத்தான் பாஜகவும் விரும்பியது, எதிர்பார்த்தது. பாஜகவின் ஸ்கிரிப்டைத்தான் ஓ.பன்னீர் செல்வம் அமல்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் கூட அதிமுகவினர் ஓ.பன்னீர் செல்வம் பின்னால்தான் அணிவகுப்பார்கள் என்பதால் நிச்சயம் சசிகலாவுக்கு இது பெரும்
மரண அடி என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு வேளை எம்.எல்.ஏக்களை வைத்து சசிகலா தனது கனவை சாதிக்க முயன்றால், அதையும் கூட பாஜக ஆதரவுடன் ஓ.பன்னீர் செல்வம் தகர்த்து விடுவார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே சசிகலாவின் முதல்வர் கனவு கிட்டத்தட்ட கரைந்து காணாமல் போய் தரைமட்டமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications