சசி குடும்பத்திற்குள் கட்சி சென்று விடக்கூடாது என்று ஜெ., விரும்பினார் - ஓபிஎஸ்
அதிமுகவில் எந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா விரும்பினாரோ அந்த குடும்பத்தின் கையில்தான் இப்போது கட்சியும் ஆட்சியும் சிக்கியுள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா ஒரு குடும்பத்தின் பிடிக்குள் கட்சியும் ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மாறாக இப்போது ஒரு ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்பியதில்லை, அதற்கு மாறாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகள் என்று கூறினார்.

நலத்திட்ட உதவிகள்
ஜெயலலிதாவின் உத்தரவுக்கு ஏற்ப ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படுவதாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம். இந்த ஆண்டு ஜெயலலிதா நம்மிடையே இல்லையே என்ற கவலை குடிகொண்டுள்ளது.

குடும்ப ஆட்சி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை யாரை ஒதுக்கி வைத்தார்களோ? யாருடைய கையில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்று நினைத்தாரோ, அவரது மரணத்திற்குப் பிறகு அது நடந்து விட்டது. ஜெயலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்று விட்டது.

தர்மயுத்தம்
தமிழகத்தின் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் ஆலோசனையை கேட்டு நடைபெறுகிறது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், சாமானிய மக்களின் கையில் கட்சியும், ஆட்சியும் வரும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று கூறினார். தர்மயுத்தம் வெற்றி அடைவதுதான் சரித்திரம். அது என்றைக்கும் தோல்வியடைவதில்லை என்றும் தெரிவித்தார்.

மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. பல கட்சிகளில் இருந்தும் விலகி, ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தனர். நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபுவும் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications