கராத்தே ஹூசைனி கொடுத்த புகார்.. சசிகலா கணவர் நடராஜன் திடீர் கைது!
சென்னை: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் விளார் கிராமத்தில் ஈழத் தமிழர் துயரை விவரிக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் சிற்பங்களை அமைக்க ஹூசைனியிடன் நடராஜன் முன்பணம் கொடுத்திருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஹுசைனி சிற்பங்களை முடித்துதராமல் ஏமாற்றுகிறார்என்று முள்ளிவாய்க்கால் முற்றம் தரப்பினர் சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தமக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை கேட்கப் போன போது சசிகலா நடராஜன் தம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார் என்று ஹூசைனியும் ஒரு புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடராஜனை சென்னை போலீசார் இன்று குற்றாலத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications