சசிகலாவுக்கு எதிராக தமிழக மக்களை திரட்டுவேன்.. தீயாய் வேலை செய்யும் தீபா
சசிகலாவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களை திரட்டப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். மக்கள்தான் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டசபைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தாலும் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு எதிர்ப்பு அலையே வீசுகிறது. சசிகலா வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்றதும் அடுத்த ஆறு மாதங்களில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆகவேண்டும். அப்போது தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.
சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதல்வரை மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது மக்களின் மனநிலைக்கு எதிரான செயல் என்றார். சசிகலாவிற்கு எதிராக மக்களை திரட்டப் போகிறேன் என்றும் ஜெ.தீபா கூறியுள்ளார்.

ஜெ. தீபா அரசியல் கட்சி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொண்டர்கள் ஆதரவு
தீபாவைக் காண தினசரியும் தஞ்சாவூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜெ.தீபா வீட்டின் முன்பு நேற்று பெண்கள் உள்பட தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

தீபா கண்டனம்
தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய தீபா, என்னை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. தமிழக மக்களின் சுதந்திரம் இழந்ததுபோல் ஒரு சூழல் தற்போது உருவாகி உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்.
இதில் மக்களுக்கு எந்த வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் ஆட்சி செய்யலாம்.

மக்களாட்சி மலரவேண்டும்
ஜெயலலிதா என்ற பெயர் அழிந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை. உங்களுக்காக நான் தொடர்ந்து பணி செய்வேன். நீங்கள் விரும்பும் குரலை உயர்த்தி உறுதியாக இருங்கள். நிச்சயமாக நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நிழலைக்கூட யாரும் தொட முடியாது. அதற்கு நானும் விடமாட்டேன். ஜனநாயகம், மக்களாட்சி மலரவேண்டும் என்பதற்காக நான் துணை நிற்பேன் என்று தீபா கூறியுள்ளார்.

ஜெ.தீபா பேரவை
ஜெ.தீபா பேரவையில் சுமார் 11 லட்சம் பேரும், கட்சியில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இணைந்துள்ளதாகவும், குறிப்பாக அதிமுகவில் 90 சதவீத ஆதரவு தீபாவுக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சசிகலாவிற்கு எதிராக மக்களை திரட்டப் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications