பொதுச்செயலாளர் விவகாரம்: சுத்தி சுத்தி வேலைசெய்யும் சசி அணி.. கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அளிக்கப்பட்ட புகாரை எதிர்த்து சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அளிக்கப்பட்ட புகாரை எதிர்த்து சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரங்களில் மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்னை பொதுச்செயலாளராக நியமித்துக் கொண்டு சசிகலா கட்சியயை கைப்பற்றினார். ஆட்சியையும் அவர் கைப்பற்ற முயன்றதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து தனி அணியாக செயல்பட்டுவரும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சசிகலா அணியினர் கூடுதல் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

12752 பக்க பிரமாணப் பத்திரம்
அவர்கள் 12752 பக்க பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் மாவட்ட நிர்வாகிகளின் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 1991 பக்கங்கள்
ஏற்கனவே 1991 பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணி தாக்கல் செய்துள்ளது. அவற்றில் பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் முடிவு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு அணிகளும் தங்கள் பக்க ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் பொதுச்செயலாளர் விவகாரத்தில் விரைவில் முடிவு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications