ஓபிஎஸ் அணி சவப்பெட்டி பிரசாரத்துக்கு கடும் எதிர்ப்பு- தினகரன் கோஷ்டி மறியல்- போலீஸ் குவிப்பு!
ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியின் மாதிரியை வைத்து அரசியல் நடத்தும் ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தினகரன் கோஷ்டியினர் மறியலில் ஈடுபட்டத
சென்னை: ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியை வைத்து வாக்கு சேகரித்த ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தினகரன் கோஷ்டியினர் ஆர்.கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் எந்த தேர்தலில் இல்லாத அளவுக்கு பறக்கும் படைகள், கண்காணிப்பு என ஆர்.கே.நகரே அமர்க்களப்பட்டு வருகிறது.

எனினும் பணம் வினியோகத்தை கட்டுப்படுத்த முடியாததால் நாட்டிலேயே முதல்முறையாக மைக்ரோ அப்சர்வர்ஸை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சவப் பெட்டியின் மாதிரியை காண்பித்து ஓபிஎஸ் அணியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து ஓபிஎஸ் அணியினர் சவப்பெட்டி பிரசாரத்தை கைவிட்டனர். இதனிடையே சவப்பெட்டியை வைத்து அரசியல் நடத்தும் ஓபிஎஸ் மற்றம் பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி தினகரன் தரப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்க்கப்பட்டனர். மேல்லும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரை கண்டித்தும் தினகரன் கோஷ்டியினர் மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications