நாஞ்சில் சம்பத் விலகல்- தினகரனை விளாசிய சசிகலா... உதவியாளர் ஜெகஜ்ஜால 'ஜனா' மீதும் புகார்!
நாஞ்சில் சம்பத் விலகியதில் தினகரன் மீது சசிகலா ரொம்பவே கோபத்தில் இருக்கிறாராம்.
Recommended Video

சென்னை: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதை சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லையாம். நாஞ்சில் சம்பத்தை மீண்டும் சேர்க்க சமாதானம் பேசித்தான் ஆக வேண்டும் என தினகரனுக்கு கறார் உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.
அதிமுகவில் சசிகலா தலையெடுத்த போது ஒதுங்கிக் கொண்டவர் நாஞ்சில் சம்பத். பின்னர் சசிகலா தலைமையை ஏற்றார். அதன் பின் தினகரனின் தலைமையையும் ஏற்றுக் கொண்டார்.
தினகரனை மக்களின் தலைவராக, திராவிடத்தின் தலைவராக வழிபாட்டுக்குரியவராகவே போற்றி வந்தார் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்ட விசுவாசியாக வலம் வந்த நாஞ்சில் சம்பத் திடீரென தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டார்.

சசிகலா மீது மரியாதை
ஆனாலும் சசிகலா மீதும் மறைந்த நடராஜன் மீதும் அன்போடு இருக்கிறார் நாஞ்சில் சம்பத். சசிகலாவை இப்போதும் 'சின்னம்மா' என்றே அழைத்து உருகிறார் நாஞ்சில் சம்பத். பரோலில் வந்துள்ள சசிகலாவிடம் நாஞ்சில் சம்பத் விவகாரம் பேசப்பட்டிருக்கிறது.

தினகரனிடம் சீறிய சசிகலா
நாஞ்சில் சம்பத் போன்றவர்களை தினகரன் கைவிட்டது ஏற்கவே முடியாது என கோபத்தை கக்கியிருக்கிறார் சசிகலா. அப்போதுதான் என்ன நடந்தது என்கிற விவரமும் நாஞ்சில் சம்பத் தரப்பில் சசிகலாவுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது.

தடுத்த ஜெகஜ்ஜால ஜனா
அதாவது தினகரனை நாஞ்சில் சம்பத் சந்திப்பதையும் உதவிகள் பெறுவதையும் உதவியாளர்களான ஜெகஜ்ஜால ஜனாவும் பிரபுவும் விரும்புவதில்லையாம். இவர்கள்தான் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சீனியர்கள், தினகரனை சந்திக்கவிடாமல் தடுத்து வருகின்றனராம்.

தவிப்பை ரசித்த தினகரன்
இப்படி சீனியர்கள் தம்மை சந்திக்க முடியாமல் தவிப்பதை, எம்ஜிஆராக கருதிக் கொண்டிருக்கும் தினகரன் ரொம்பவே ரசிக்கவும் செய்திருக்கிறார். இதனால் நாஞ்சில் சம்பத் விலகியதை பற்றியும் தினகரன் கவலைப்படவும் இல்லையாம். இந்த தகவல்கள் சசிகலாவை கொதிப்படைய வைத்துவிட்டதாம். என்ன செய்வீர்களோ, நாஞ்சில் சம்பத்திடம் சமாதானம் பேசுங்கள் என இப்போது தினகரனுக்கு கறார் உத்தரவை பிறப்பித்திருக்கிறாராம் சசிகலா. தினகரனும் 'ஆகட்டும்' என தலையாட்டிக் கொண்டிருக்கிறாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications