மயிலை கோலவிழியம்மன் கோவில் கும்பாபிஷேகமும்... சசிகலா நடத்திய சண்டியாகமும்
சென்னை: மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்ய வந்த சசிகலாவிற்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டது. ஆகம விதிகளை மீறி அவர் மகா சண்டியாகம் நடத்தியதாகவும், ஆலய நிர்வாகிகள் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுடன் இணைந்த கோலவிழி அம்மன் கோயிலில் ரூ.50 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று இரவு திடீரென கோலவிழி அம்மன் கோயிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.

சசிகலாவின் வருகையையொட்டி கோயிலை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு பல சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தன.
ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் ஏற்பாடு நடைபெறும் போது அது முடிந்த பின்புதான் கோயிலில் பூஜை செய்வது வழக்கம். ஆனால் கோயில் விதிகளை மீறி முதல்வர் ஜெயலலிதாவிற்காக நேற்று கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு சண்டி யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் போலீசார் கடும் கெடுபிடி செய்தனர். இதனால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இன்றும் சசிகலா வரவுள்ளதாக வந்த தகவல் தான் போலீசாரின் இந்த கெடுபிடிக்கு காரணம் என்று கூறப்பட்டது.
கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் யாரும் எளிதில் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக முக்கிய விஐபிக்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கொதிப்படைந்தனர். கும்பாபிஷேகத்தை பார்வையிட முடியாமல் சாதாரண பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் சசிகலா இன்று கோவிலுக்கு வரவில்லை. வராத நபருக்காக எதற்கு இத்தனை கெடுபிடி செய்யவேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று சிறப்பு பிராத்தனைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications