அதிமுக பொதுக்குழுவிற்கு வராமல் அதிர்ச்சி கொடுத்த சசிகலா.. பின்னணியில் பதவி போட்டி?
சென்னை: அதிமுகவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் கொடுத்து சசிகலா தூக்கிவிடப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழுவில் சசிகலா கலந்துகொள்ளாத அளவுக்கு கழற்றிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட கால தோழி சசிகலா. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலாவும் சிறைதண்டனை பெற்றிருந்தனர்.
சிறையிலும் கூட ஒரே பகுதியில், ஜெயலலிதா, சசிகலா அடைக்கப்பட்டிருந்தனர். சில நேரங்களில் இருவருக்கும் நடுவே சிறு அளவில் விரிசல் ஏற்பட்டாலும், விரைவிலேயே அது சரியாகித்தான் வந்துள்ளது.

2வது இடம்
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ளதால், தோழி சசிகலா, அதிமுகவில், ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்திற்கு தூக்கி வைக்கப்படுவார் என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

பொதுக்குழு
ஜெயலலிதா தலைமையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இதுகுறித்த முடிவு ஒருவேளை எடுக்கப்படலாம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கூட்டத்திற்கும்
இந்நிலையில், திடீர் திருப்பமாக, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கே சசிகலா வரவில்லை. எப்போதுமே சசிகலா அப்படி இருந்திருந்தால் இது பெரும் விவகாரமாகியிருக்காது. ஆனால், இதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களுக்கு சசிகலா வந்திருந்த நிலையில், நேற்றுதான் மிஸ்சிங்.

அவ்வளவுதானா
ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்துக்கு சசிகலா வர வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், சசிகலா, பொதுக்குழுவிற்கு வருகை தராதது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. சசிகலாவை இப்போதுள்ள அளவிலேயே வைத்திருக்க ஜெயலலிதா முடிவு செய்திருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications