அதிமுகவை உடைக்கும் சதியை முறியடித்து சசிகலா முதல்வராவார்: சி.ஆர்.சரஸ்வதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கட்சி உடைந்துவிடக்கூடாது என்று அக்கட்சி செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
சசிகலா தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு, இதுபற்றி நிருபர்களிடம் சி.ஆர்.சரஸ்வதி சசிகலாவுடன் இருப்பவர்கள்தான் உண்மையான அதிமுக தொண்டர்கள். ஜெயலலிதாவின் ஆன்மாதான் கட்சியை வழிநடத்தி வருகிறது.

மிக விரைவில் சசிகலா முதல்வராக அமர்வார். 99 சதவீதம் எம்.எல்.ஏக்கள் சசிகலாவிடம் உள்ளனர். திமுகதான் இந்த குழப்பத்தின் பின்னணியில் உள்ளது. சசிகலா தலைமையில் கட்சியை உடைக்கும் முயற்சியை முறியடிப்போம். இப்போதைக்கு அரசியல் பேச தயாராக இல்லை. நாங்கள் முறைப்படி ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளோம் என்றார் சரஸ்வதி.












Click it and Unblock the Notifications