சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி
சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்று ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக் தெரிவ
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எனது அம்மா போன்றவர் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார்.

இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் தொலைபேசி வழியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு தீபக் பதிலளித்துள்ளார்.
உங்களுக்கு சசிகலா மீது முழு நம்பிக்கையுள்ளதா? எந்த வகையான உறவு முறை உங்களுடையது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக், "அவர் எனது அம்மா போன்றவர்" என்றார்.
சசிகலாவுடன் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டா என்ற கேள்விக்கு "அவர் எனது தாய். பிறகு எதற்காக அவ்வப்போது பேசிக்கொள்ள வேண்டும்" என்றார் தீபக்.
சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்றார்.
தீபக்கின் சகோதரியான தீபா, தன்னைத்தான் அதிமுகவின் அடுத்த வாரிசு என கூறிவருகிறார். அவரை சசிகலாவுக்கு எதிராக களமிறக்க அதிமுகவின் ஒரு பிரிவு முயன்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தீபக் இவ்வாறு கூறியுள்ளது தீபா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications