சசிபெருமாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. சொந்த கிராமத்தில் இன்று உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு
ஆசாரிப்பள்ளம் : சசி பெருமாளின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று சேலத்தில் உள்ள சொந்த கிராமத்தில் சசிபெருமாள் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 31-ம் தேதி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசிபெருமாள் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடலை வாங்கப்போவதில்லை என கூறி அவரது உறவினர்கள் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்ற மாவட்ட நிர் வாகத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் உறுதியா கூறிவிட்டனர்.

உடலை பாதுகாப்பதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிரமம் ஏற்பட்டதையடுத்து, சசிபெருமாளின் உடலை பெறுமாறு, அவரது உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எரியூட்டும் சட்டபூர்வ நடவடிக்கையில் இறங்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதனிடையே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, வைகோ முன்னிலையில் சசிபெருமாளின் இளைய மகன் நவநீதனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்ற பின்னர் அவரது உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார்.
சசிபெருமாளின் உடல் சேலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு சொந்த தோட்டத்தில் சசிபெருமாளின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக உடலைப் பெற்றுக் கொள்வதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications