சீமான் மோதல்! நாதகவில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல்? எக்ஸ் பக்கத்தில் 'கொபசெ' நீக்கம்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் விலகக் கூடும் என தெரிகிறது. சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் நாதக கொள்கை பரப்புச் செயலாளர் என பதிவிட்டிருந்ததை திடீரென நீக்கி இருப்பதைத் தொடர்ந்து அக்கட்சியைவிட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த நிலையில் சாட்டை துரைமுருகன் இருந்து வருகிறார். சீமானின் நடிகை விவகாரத்திலும் சாட்டை துரைமுருகனின் பெயர் அடிபட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசி வழக்குகளை எதிர்கொண்டவர் சாட்டை துரைமுருகன்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். சாட்டை துரைமுருகன் இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் இடம் பெறும் கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது என சீமான் அறிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக, சாட்டை துரைமுருகன் தமது யூ டியூப் சேனலில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்துத்துவவாதி அல்ல; அனைவருக்கும் பொதுவானவர் என ஆதரவு தெரிவித்திருந்தார். அதேபோல தேடப்படும் பாலியல் குற்றவாளியான சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவிடம் ஆன்லைனில் சாட்டை துரைமுருகன் தமது யூ டியூப் சேனலுக்காக கேள்வி கேட்டிருந்தார். மேலும் தாது மணல் கொள்ளை தொடர்பாகவும் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இவை அனைத்தும் சீமானுக்கு கடும் நெருக்கடியையும் நாம் தமிழர் கட்சி மீது கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் திடீரென தமது சமூக வலைதளப் பக்கத்தில், நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாளங்களை நீக்கி இருக்கிறார்; அத்துடன் சுதந்திரமாக இருப்பது போன்ற படம் ஒன்றையும் முகப்புப் படமாக வைத்துள்ளார்; இதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் வெளியேறுகிறாரா? அல்லது நீக்கப்படுகிறாரா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications