எங்கோ வாழும் ஒரு முதலாளி முக்கியமா?... இல்லை தமிழக மக்கள் முக்கியமா?- சத்யராஜ் நறுக்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு சத்யராஜ் கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100ஆவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அலுவலகத்தை சூறையாடினர். இதனால் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது மார்பு மற்றும் வாய் பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பயன்படுத்தியது ஏன்?
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தாமல் உயிரை கொல்லும் தோட்டாக்களை பயன்படுத்தியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
ஆழ்ந்த இரங்கல்
இதுகுறித்து நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆராய வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா?. இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் நம் தமிழக மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை ஆராய வேண்டும்.

உங்களில் ஒருவனாக...
இது நெஞ்சை பதைக்க வைக்கிறது. வேதனைப்படுத்துகிறது. இந்த கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உள்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இரங்கலை உங்களில் ஒருவனாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications