வைகோ மனுவை ஏற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக நடந்த வழக்கை இறுதிக்கட்டமாக விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மேலும் ம.தி.மு.க. தலைவர் வைகோ சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் 2 மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த 2 மேல் முறையீடு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏற்கனவே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவோடு இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுடன், வைகோ தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது.
இதனைய அடுத்து திங்களன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.கே.நிஜ்ஜர், முகமது இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் கொண்ட பசுமை அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications