பச்சரிசி மாவெடுத்து பக்குவமா படையலிட்டு .. கொளத்தூரில் கலக்கிய பன்னாட்டுப் பெண்கள்!
சென்னை: பொங்கல் விழா என்றாலே, தமிழகத்திற்கு வெளிநாட்டவர் வருகை அலை மோதும். தமிழர்களோடு இணைந்து பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்வார்கள்.
தை பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் மக்கள் வீடுகளுக்கு வெள்ளை அடித்து புதுப் பானை வாங்கி பச்சரிப் பொங்கல் வைத்து குதூகலிக்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னைப் பட்டணத்திலும் பொங்கல் விழா களை கட்டத் தொடங்கியுள்ளது.

பள்ளி கல்லூரிகளில்
நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பொங்கல் விழாவின் மகத்துவத்தையும் இளைய தலைமுறையினரும் அனுபவித்துத் தெரிந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொளத்தூர் பள்ளியில்
சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் இன்று பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவ, மாணவியருடன் ஆசிரியர்களும் பண்டிகையைக் கொண்டாடினர்.

கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில்
அதேபோல சென்னை கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வெளிநாட்டு மகளிர்
இதில் வெளிநாட்டுப் பெண்கள் சிலரும் பங்கேற்று பொங்கல் பண்டிகையின் சிறப்பை நுகர்ந்து பார்த்தனர்.

குத்த வைத்து பொங்கலிட்டு
நம்ம ஊரில் கிராமத்தில் குத்த வைத்து உட்காருவது போல இவர்களும் குத்த வைத்து உட்கார்ந்து பொங்கல் வைத்தனர்.

சம்மனம் போட்டும் அழகாக வைத்த பொங்கல்
சில பெண்கள் அழகாக சம்மனம் போட்டு உட்கார்ந்து பொங்கல் வைத்தது காமெடியாக இருந்தாலும் அழகாக இருந்தது.

கும்மிப் பாட்டு
மேலும் கல்லூரி மாணவிகள் கூடி நடத்திய கும்மியடிக்கும் நிகழ்ச்சியைும் பார்த்து ரசித்தனர்.

மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா
அதேபோல தமிழர்களின் பாரம்பிரய பழக்க வழக்கமான உரலில் இடிப்பது, மஞ்சள் அரைப்பது உள்ளிட்டவற்றையும் அவர்கள் செய்து பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.
மொத்தத்தில் இந்த பொங்கல் விழா நம்ம ஊர் மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் குழுவினருக்கும் தித்திப்பாக அமைந்தது.












Click it and Unblock the Notifications