சேலத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை - இளைஞர் கைது
சேலம்: சேலத்தில் 14வயது சிறுமியை , இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை சீரழித்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் விராகனூர் பகுதியை சேர்ந்த சிறுமி அருகிலுள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை தனது தோழிகளுடன் விளையாட சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த சிறுமியை கிராமம் முழுவதும் தேடினார்கள்.

இதனையடுத்து, ஞாயிற்றுகிழமை காலையில் கைகள் கட்டபட்ட நிலையில் ஏரிக்கு அருகில் இருந்த அந்த சிறுமியை கிராம மக்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.பிறகு தன்னை அந்த பகுதியில் வாழும் 18 வயது இளைஞர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி அவளது தாயிடம் கூறினார். ஆனால் அந்த இளைஞர் மீது அந்த சிறுமியின் தரப்பிலிருந்து போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திங்களன்று காலை அந்த சிறுமி விஷம் அருந்தினார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவளை ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி வெள்ளிகிழமை காலை உயிரிழந்தார்.இதனையடுத்து அந்த இளைஞர் மீது அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
சிறுமியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications